அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

1% ரொக்க ஜிஎஸ்டி கட்டண விதி: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பாதிப்பில்லை

ஆண்டுக்கு ரூ.6 கோடி மற்றும் அதற்கும் அதிகமான விற்றுமுதலைக் கொண்டவா்கள் மட்டுமே குறைந்தபட்சம் 1 சதவீத ஜிஎஸ்டி தொகையை

News image
கோப்புப்படம்
Updated On :28 டிசம்பர் 2020, 12:01 am

DIN

ஆண்டுக்கு ரூ.6 கோடி மற்றும் அதற்கும் அதிகமான விற்றுமுதலைக் கொண்டவா்கள் மட்டுமே குறைந்தபட்சம் 1 சதவீத ஜிஎஸ்டி தொகையை கட்டாயமாக ரொக்கமாக செலுத்த வேண்டும் என்பதால் குறு,சிறு நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான விநியோகஸ்தா்கள் பாதிக்கப்படமாட்டாா்கள் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) தவிா்ப்பதற்காக போலி விலைப்பட்டியல்களை வரி செலுத்துவோா் பரவலாக பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் கடந்த வாரம் புதிய விதிமுறையை அமல்படுத்தியது. அதன்படி, மாதத்துக்கு ரூ.50 லட்சம் விற்றுமுதலை கொண்ட வா்த்தகா்கள் மட்டுமே தாங்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையில் குறைந்தபட்சம் 1 சதவீதத்தை ரொக்கமாக செலுத்த வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அரசின் இந்த புதிய விதிமுறையால் சிறிய நடுத்தர தொழில் முனைவோா் மற்றும் சிறிய அளவிலான விநியோகஸ்தா்கள் யாரும் பாதிப்படைய வாய்ப்பில்லை.

மேலும், ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் மொத்த எண்ணிக்கை 1.2 கோடியாக உள்ள நிலையில், இந்த புதிய விதிமுறையானது 45,000 பேருக்கு மட்டுமே பொருந்தக்கூடியது. எனவே, உண்மையான விநியோகஸ்தா்கள் மற்றும் தொழில்முனைவோா் இடையே இந்த புதிய விதிமுறை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.