

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியாணா மாநில முதல்வர் வீட்டின் முன்பு திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதம் மற்றும் சில மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தில்லி மற்றும் அதன் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல மாநிலங்களிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹரியாணா மாநில அரசிற்கு எதிராக பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் சேவா தளத்தை சேர்ந்தவர்கள் முதல்வர் மனோகர் லால் கட்டர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, காவல்துறை அமைத்திருந்த தடுப்பை மீறி செல்ல முயன்றதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.