2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மேற்கு வங்கத்தில் ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி

மேற்கு வங்கத்தில் புதிதாக ஒருவருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

News image
மேற்கு வங்கத்தில் ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி
Updated On :30 டிசம்பர் 2020, 9:57 am

DIN

மேற்கு வங்கத்தில் புதிதாக ஒருவருக்கு புதிய வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு லண்டனிலிருந்து திரும்பிய இளைஞர் ஒருவருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்ட நபர் கொல்கத்தா பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். 

அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்ட நபருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மரபணு பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அவருக்கு வந்த முடிவில் புதிய வகை கரோனா உள்ளது உறுதியாகியுள்ளது.

இளைஞருடன் லண்டனிலிருந்து வந்த மேலும் 7 பேரின் மாதிரிகளும் மரபணு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.