சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த கேரள பாஜக எம்.எல்.ஏ.

கேரள மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரானத் தீர்மானத்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த பாஜக எம்.எல்.ஏ.
Updated On :31 டிசம்பர் 2020, 9:45 am

DIN

கேரள மாநிலத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிரானத் தீர்மானத்திற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜகோபால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (டிச.31) காலை கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது. இதில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை  சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.

விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்தால் கேரளத்தை கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும், மற்ற மாநிலங்கள் உணவுப் பொருள்களை நிறுத்தினால் கேரள மக்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை எனவும் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

ஆளும் இடதுசாரி கொண்டு வந்த இந்தத் தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சியும் ஆதரவளித்தது. தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ராஜகோபால் வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

ராஜகோபால் அவர்களின் ஆதரவு மாநில பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜகோபால் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.