வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: கேரள சட்டப் பேரவையில் நிறைவேற்றம்
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (டிச.31) காலை கேரள சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியது.
இதில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் முன்மொழிந்தார்.
விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நீடித்தால் கேரளத்தை கடும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்றும்,
மற்ற மாநிலங்கள் உணவுப் பொருள்களை நிறுத்தினால் கேரள மக்கள் பட்டினி கிடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை எனவும் பேரவையில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதமானது என்றும்,
விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு நியாயமான விலை தரும் வாக்குறுதியை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்றும் குறிப்பிட்டார்.
இதனைத்தொடர்ந்து வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும், விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...