ஹைதராபாத் பஞ்சகுட்டாவிலுள்ள லிஸ்பன் பப்பின் உரிமையாளர் முரளி கிருஷ்ணா என்பவர் மீது போலீஸார் பாலியல் துன்புறுத்தல் வழக்கொன்றை பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்தப் புகாரை அளித்த பெண் நடனக் கலைஞர் ஒரு நாள் கழித்து, புகாரை வாபஸ் பெறுவதாக போலீஸாரிடம் தெரிவித்தார்.
பப் உரிமையாளர் முரளி கிருஷ்ணா மீது பொய்யான புகார் அளித்ததாகவும், அந்தப் புகாரைப் போலீஸாரிடமிருந்து திரும்பப் பெற விரும்புவதாகவும் கூறி ஒரு விடியோ வெளியிடப்பட்டது. புகார் அளித்த நேரத்தில், அவர் தனது குடும்ப பிரச்னைகள் குறித்து வருத்தத்தில் இருந்தார் என்று கூறினார்.
இருப்பினும், பதிவு செய்யப்பட்டு, எஃப்.ஐ.ஆர் வழங்கிய பின்னர் புகார்களைத் திரும்பப் பெற சட்டத்தில் அனுமதி இல்லை என்று போலீஸார் தெரிவித்தனர். இரு சாராரும் இந்தப் பிரச்னையில் சமரசம் செய்ய விரும்பினால், அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்லலாம் என்றும் கூறினர்.
நேற்று, லிஸ்பன் பப்பில் டான்ஸராகப் பணிபுரிந்து வரும் திருமணமான 23 வயது பெண் ஒருவர், அந்தப் பப் உரிமையாளரான முரளி கிருஷ்ணாவால் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகக் கூறி போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குகளை பதிவு செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


