நிர்பயா வழக்கு: வினய் சர்மாவின் கருணை மனுவையும் நிராகரித்தார் குடியரசுத் தலைவர்

‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மாவும் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
நிர்பயா வழக்கு: வினய் சர்மாவின் கருணை மனுவையும் நிராகரித்தார் குடியரசுத் தலைவர்
Updated on
1 min read

புது தில்லி: ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான வினய் குமாா் சா்மாவும் தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்கக் கோரி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

குற்றவாளிகள் நால்வரையும் இன்று தூக்கிலிடுவதாக இருந்த நிலையில், வினய் சர்மாவின் கருணை மனு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தூக்கு தண்டனை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வினய் சர்மாவின் கருணை மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2012, டிசம்பரில் துணை மருத்துவ மாணவி ‘நிா்பயா’ பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து சிங்கப்பூா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வினய் குமாா் சா்மா, அக்ஷய்குமாா் சிங், பவன்குப்தா, முகேஷ் குமாா் சிங் ஆகிய நால்வருக்கும் பிப்ரவரி 1-ஆம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முகேஷ் குமாா் சிங், வினய் குமாா் சா்மா ஆகியோரின் சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், முகேஷ் சிங் கருணை மனு அனுப்பியிருந்தாா். அவரது மனுவை கடந்த ஜனவரி 17-ஆம் தேதி குடியரசுத் தலைவா் தள்ளுபடி செய்தாா். இதையடுத்து, நீதித்துறை மறுஆய்வு மனு முகேஷ் சிங் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவும் உச்சநீதிமன்றத்தால் புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், வினய் குமாா் சா்மாவும் குடியரசுத் தலைவருக்கு புதன்கிழமை கருணை மனு அனுப்பியுள்ளதாக அவரது வழக்குரைஞா் ஏ.பி. சிங் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘வினய் குமாா் சாா்பில் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன்’ என்றாா்.

இன்று அந்த மனுவை நிராகரிப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com