தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அம்பேத்கரே தலித்துகளுக்கு தனிநாட்டினை உருவாக்க விரும்பினார்: கோவா துணை முதல்வர்

அம்பேத்கரே தலித்துகளுக்கு தனிநாட்டினை உருவாக்க விரும்பினார் என்று கோவா மாநில துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர்  தெரிவித்துள்ளார்.

News image

மனோகர் அஜ்கோன்கர்

Updated On :3 பிப்ரவரி 2020, 12:02 pm

IANS

பனாஜி: அம்பேத்கரே தலித்துகளுக்கு தனிநாட்டினை உருவாக்க விரும்பினார் என்று கோவா மாநில துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர்  தெரிவித்துள்ளார்.

கோவா மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் திங்களன்று  துவங்கியது. முதல்நாளான இன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நன்றி தெரிவித்து ஆளும் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு, கோவா மாநில துணை முதல்வர் மனோகர் அஜ்கோன்கர்  பேசியதாவது:

உங்கள் அனைவருக்கும் தெரியும், பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட சமயத்தில் அனைத்து இஸ்லாமியர்களும் அங்கு சென்றனர். அது ஒரு இஸ்லாமிய நாடாக உருவானது. அதேநேரம் இந்தியா ஒரு இந்து தேசமாக உருமாறும் என்று அனைவரும் கூறினார். இந்துக்கள் என்றால் அது கத்தோலிக்கர்கள், இஸ்லாமியர்கள்  மற்றும் தலித்துகள் என அனைத்து சமுதாயத்தினரையும் உள்ளடக்கியதுதான்.

பாபா சாஹேப் அம்பேத்கரே கூட தலித்துகளுக்கு தனிநாட்டினை உருவாக்க விரும்பினார். ஆனால் நாம் ஓற்றுமையாக இருந்து விட்டோம். இந்த சட்டத்தின் மூலம் யாருடைய குடியுரிமையையும் பறிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நினைத்ததில்லை. எனவே சிறுபாண்மையினர் யாரும் அச்சப்படத் தேவையில்ல்லை.

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.