காதலுக்கு கண் இல்லை என்பார்கள், தற்போது காதலுக்கு கரோனா வைரஸ் பயமும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இந்திய இளைஞர் ஒருவர் திட்டமிட்டபடி சீனப் பெண்ணை மணமுடித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சத்யார்த்துக்கும், சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே, கனடாவில் ஒன்றாகப் படிக்கும் போது காதல் மலர்ந்தது. இருவரும் தங்களது பட்டப்படிப்பை முடித்துவிட்டு பிப்ரவரி 2ம் தேதி சத்யார்த்தின் சொந்த ஊரில் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
இதற்கிடையே சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவியது, உலக நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், மணப்பெண்ணும், அவரது பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் ஜனவரி 29ம் தேதி சீனாவில் இருந்து புறப்பட்டு இந்தியா வந்தனர்.
அவர்களது திருமணமும் திட்டமிட்டபடி, உற்றார், உறவினர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பையும் தாண்டி, சீனப் பெண்ணை இந்திய மணமகன் கரம்பிடித்திருப்பது பெற்றோருக்கும் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


