தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்: ஒருவர் பலி, 4 பேர் காயம் 

ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தங்தார் செக்டாரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :4 பிப்ரவரி 2020, 6:49 am

IANS

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தின் தங்தார் செக்டாரில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர். 

காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலுள்ள இந்திய பாதுகாப்பு நிலைகள் மற்றும் கிராமங்களின் மீது பாகிஸ்தான் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு மற்றும்  சிறிய ரக பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் பாய்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர். மேலும், அங்கிருந்த சில வீடுகள் சேதமடைந்துள்ளன. 

பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் உரியப் பதிலடி வழங்கி வருகின்றனர். கடந்த பிப்.2-ம் தேதி தங்தார், குரேஸ் பாலாகோட் மற்றும் மெந்தாா் செக்டாா்களில் தாக்குதல் நடத்தப்பட்டதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.