கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கேஜரிவாலின் சவாலுக்குத் தயார், நேரத்தையும் இடத்தையும் சொல்லுங்கள்: அமித் ஷா

அரவிந்த் கேஜரிவாலுடன் விவாதம் நடத்தத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :4 பிப்ரவரி 2020, 5:27 pm

DIN


அரவிந்த் கேஜரிவாலுடன் விவாதம் நடத்தத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்ற பேரணியில் பங்கேற்றுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,

"கேஜரிவால் எங்களை முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்படி கூறியிருக்கிறார். மேலும், விவாதம் நடத்தத் தயார் என்றும் தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வர் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நேரத்தையும், இடத்தையும் சொன்னால்போதும். பாஜக உறுப்பினர்கள் அங்கு விவாதிக்க வருவார்கள்.

முதல்வரைப் பொருத்தவரை தில்லி மக்கள்தான் எங்கள் முதல்வர்" என்றார்.

முன்னதாக இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அரவிந்த் கேஜரிவால், "நாளை பகல் 1 மணி வரை பாஜகவுக்கு நேரம் தருகிறோம். அதற்குள் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை அவர்கள் அறிவிக்கட்டும். அப்படி அதற்குள் முதல்வர் வேட்பாளரை அறிவித்துவிட்டால், அவருடன் விவாதிக்க நான் தயார்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.