மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி
வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.


வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வயிற்று வலி காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று காலை வீடு திரும்பினார். அவரது உடல்நிலை சீரானதையடுத்து, இன்று வீடு திரும்பியதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணத்தினால், தில்லி தேர்தலுக்கான பரப்புரையில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவர் பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...