ஜெருசலேம்: கார் மோதியதில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயம்
மத்திய ஜெருசலேம் பகுதியில் நடைபாதை மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர்.


மத்திய ஜெருசலேம் பகுதியில் நடைபாதை மீது வேகமாக வந்த கார் மோதிய விபத்தில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர்.
ட்ரம்பின் அமைதி திட்டம் தொடர்பாக பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில் ஜெருசலேமில் இந்த விபத்து நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் போலீஸார் கூறுகையில்,
ஜெருசலேமின் மத்திய பகுதியில் பிரபல ஓட்டல்கள் உள்ள டேவிட் ரெமிஸ் சாலைக்கு அருகே வாகனத்தை ஓட்டி வந்த நபர் நடைபாதையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது வேகமாக மோதியுள்ளார்.
இந்த விபத்தில் 12 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளன. வாகனத்தை ஓட்டி வந்த நபர் தப்பியோடிவிட்டார். அவரைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
இது, தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...