புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ரகசிய சந்திப்பு: கேஜரிவால் அழைப்பு

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி, கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் ரகசிய சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 4:23 pm

DIN


தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி, கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் ரகசிய சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி 59 இடங்களில் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளது.

இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்கள் மட்டும் பங்கேற்கும் ரகசிய சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் இன்னும் தொடங்கவில்லை. இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, கோபால் ராய் மற்றும் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். 

இதுதொடர்பாக ஆம் ஆத்மி வட்டாரங்கள் தெரிவித்ததன்படி, பதவியேற்பு விழா குறித்து தலைவர்கள் திட்டமிடவுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.