புது தில்லி: நாடு முழுவதும் உள்ள சிறைக்கைதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தவிட்டுள்ளது.
தில்லியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் பிரவீன் குமார் சவுத்ரி, அதுல் குமார் துபே மற்றும் பிரேர்னா சிங் ஆகிய மூவரும் தில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். மனுவில் அவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 62 (5) சிறையில் உள்ள கைதிகளின் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாகவும், கைதிகளுக்கான வாக்களிக்கும் அடிப்படை உரிமையை இப்பிரிவு மீறுவதால் இது அரசியல் சாசனப் படி செல்லுமா என்பது குறித்து கேள்வி எழுப்பி இருந்ததுடன், சிறைக்கைதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்க உரிமை வேண்டும் என்றும் அவர்கள் கோரி இருந்தனர்.
இந்த மனுவானது தலைமை நீதிபதி படேல் மற்றும் நீதிபதி ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்துள்ளதைச் சுட்டிக் காட்டி, அவற்றின்படி வாக்களிக்கும் உரிமை என்பது மக்களுக்கு சட்டப்படி உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பால் வழங்கப்பட்ட உரிமையே அன்றி, அது அடிப்படை உரிமையில் வராது என்று தெரிவித்தனர்.
எனவே முன்னர் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் இந்த மனுவை அவர்கள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


