மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜப்பான் கப்பலில் 2 இந்தியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

ஜப்பானில் தனிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 3:47 pm

DIN


ஜப்பானில் தனிப்படுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பலில் இரண்டு இந்தியர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டயமண்ட் பிரின்சஸ் என்ற கப்பலில் இருந்து ஹாங்காங் துறைமுகத்தில் தரையிறங்கிய ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, டோக்கியோவுக்குத் தெற்கேயுள்ள யோகோஹாமா துறைமுகத்திற்குக் கடந்த வாரத்தில் வந்த டயமண்ட் பிரின்சஸ் கப்பல் தனிப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கப்பலில் 1,100 பணியாளர்களுடன் 2,670 பயணிகளும் சேர்த்து மொத்தம் சுமார் 3,700 பேர் இருக்கின்றனர். புதிய காற்றை சுவாசிப்பதற்காக சுழற்சி முறையில் இவர்கள் கப்பலின் மேற்தளத்தில் வந்து நிற்க அனுமதிக்கப்படுகின்றனர். தொடர்ந்து, இவர்கள் தங்கள் உடல் வெப்பநிலையைச் சோதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே 136 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், புதிதாக 30-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தக் கப்பலில் கரோனா வைரஸாஸ் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

இதில், 2 இந்தியர்களுக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக ஜப்பானில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், ஜப்பான் சுகாதார நெறிமுறைப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு, தனிமைப்படுத்தப்படுவது உட்பட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய சிகிச்சையளிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.