விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருபது வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொடூர சம்பவம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெண்டூர்த்தி காவல் நிலைய எல்லைக்குள் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்வரூப ராணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் இருந்து வியாழன் அன்று புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (20) என்பவர் சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியிருக்கிறாரா என்பது தெரிய வந்தது. சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஜெகதீஷ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடந்து நடைபெற்று வருகிறது
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நெல்லை-சென்னை மெமு ரயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயா்ந்து புதிய உச்சம்!

ஜிஎஸ்டி, பூந்தமல்லி சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


