அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவி: உச்ச நீதிமன்றம்

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

News image
Updated On :17 பிப்ரவரி 2020, 12:42 pm

DIN

ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் உயர் பதவிகள் வழங்கப்படலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

ராணுவத்தில் பெண்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படுவதில்லை என்று 1993ம் ஆண்டு முதல் ராணுவத்தில் சேர்ந்த 332 பெண்கள் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகராக உயர் பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், இதற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் வாதத்தின்போது, 'ஆண்களை விட பெண்கள் வலிமை குறைந்தவர்கள், பெண்களின் தலைமையை சில ஆண்கள் ஏற்கமாட்டார்கள், மேலும் பெண்களுக்கு குடும்ப பொறுப்புகளும் உள்ளது. இடமாற்றங்கள், பிரசவ கால விடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் பெண்களுக்கு உள்ளது' என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

அதே நேரத்தில் எதிர்தரப்பினர், இந்திய அரசியலமைப்பிலே ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். எனவே, ராணுவத்தில் உயர் பதவியில் பெண்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. 

ஆனால், இதனை ஏற்க மறுத்த டி.ஒய்.சந்திரசூட், அஜய் ரஸ்டோகி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு, 'ராணுவத்தில் சேவை செய்ய பெண்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஆண்களுக்கு நிகராக பெண்களை உயர்பதவியில் நியமிக்க வேண்டும். உடலியல் சார்ந்த விஷயங்ளை வைத்து அவர்களின் வலிமையை நிர்ணயிக்க முடியாது. நாட்டில் சில கடுமையான சூழ்நிலைகளில் கூட பெண்கள் தங்களது வலிமையை நிரூபித்துள்ளனர். மத்திய அரசு தரப்பு தனது மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து 3 மாத காலத்திற்குள் ராணுவத்தில் தகுதியான பெண்களை உயர்பதவியில் நியமிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.