ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

பயங்கரவாதிகள் படித்தவர்கள், ஆனால் உயிரின் மதிப்பு தெரியாதவர்கள்: ராஜ்நாத் சிங் பேச்சு 

பயங்கரவாதிகள் படித்தவர்கள், ஆனால் உயிரின் மதிப்பு தெரியாமல்  மக்களைக் கொல்கிறார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். 

News image

ராஜ்நாத் சிங்

Updated On :20 பிப்ரவரி 2020, 12:18 pm

பயங்கரவாதிகள் படித்தவர்கள், ஆனால் உயிரின் மதிப்பு தெரியாமல்  மக்களைக் கொல்கிறார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். 

இன்று ஹரியாணாவில் என்ஐடி குருக்ஷேத்ராவின் 17வது மாநாட்டில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். 

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், பயங்கரவாதிகள் ஒன்றும் கல்வியறிவு பெறாதவர்கள் அல்ல. அவர்கள் படித்த பட்டதாரிகள், தொழில்நுட்ப பட்டம் பெற்றவர்கள். அவர்களும் இளைஞர்கள்தான். வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். ஆனால், உயிர் பற்றிய அவர்களது மதிப்புகளில் வேறுபாடுகள் இருப்பதால் அவர்கள் மக்களைக் கொல்கிறார்கள். 

2001ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி விமானிகள் டவரில் தங்களது விமானத்தை விபத்து ஏற்படச் செய்தனர். அவர்களுக்கு என்ன கல்வியறிவு இல்லையா? ஹரியாணாவில் ஒவ்வொரு கிராமத்திலும் ராணுவ அதிகாரிகள் உள்ளனர். 

ஹரியாணாவைச் சேர்ந்த கல்பனா சாவ்லா விண்வெளிப் பயணத்தில் சாதனை படைத்தார். ஐஏஎஃப் படைத் தலைவர் மிண்டி அகர்வால் பாலகோட் வான்வழித் தாக்குதலில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். எனவே, நீங்கள் ஒரு படைப்பாளராக மாற வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.