புது தில்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - மெலனியா டிரம்ப் தம்பதி பிப்ரவரி 24 - 25ம் தேதி இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்கள்.
அவர்களுடன் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் குஷ்னரும் இந்தியா வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் ஜரேட் இருவருமே அமெரிக்க அதிபரின் மூத்த ஆலோசகர்களாவர். அதிபரின் ஆலோசகர்கள் என்ற அடிப்படையில், அதிபருடன் அவர்களும் இந்தியா வருகை தருகிறார்கள்.
இந்திய வருகையின் போது இந்த நால்வரும், புது தில்லியில் இருந்து ஆமதாபாத்துக்கும், அங்கிருந்து ஆக்ரா வந்து தாஜ்மகாலையும் பார்க்க திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபருடன் உயர்மட்டக் குழுவும் இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. இதுதான் அமெரிக்க அதிபர் டிரம்பின் முதல் அதிகாரப்பூர்வ இந்திய வருகையாகும். இந்த நிகழ்ச்சியில் ஆமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள மொடேரா மைதானத்தைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியிலும் டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையத்தில் பதிவேடுகளை ஆய்வுசெய்த ஆட்சியா்

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


