ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மிக லாவகமாக படியேறும் யானை: விடியோவைப் பாருங்கள் அசந்து போவீர்கள்

சாலையோரம் இருக்கும் நேரான படிகட்டுகளை மிக அழகாக ஏறிச் செல்லும் யானையின் விடியோ இன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

News image
Updated On :21 பிப்ரவரி 2020, 11:18 am


புது தில்லி: சாலையோரம் இருக்கும் நேரான படிகட்டுகளை மிக அழகாக ஏறிச் செல்லும் யானையின் விடியோ இன்று பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி (ஐஎஃப்எஸ்) பிரவீன் கஸ்வான் தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த யானை மிக அழகாக படிகட்டுகளைப் பயன்படுத்துகிறது. மேலேச் செல்ல வேறு வழிகள் இருந்தாலும், படிகட்டு வழியாகச் செல்கிறது. கடைசியாக இந்த பார்வை நமக்கு பல விஷயங்களைச் சொல்கிறது என்று பதிவிட்டு ஒரு விடியோவை இணைத்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, பாருங்களேன், படிகட்டுகளை இந்த யானை எவ்வளவு லாவகமாகப் பயன்படுத்துகிறது. யானைகள் மிக திறமைமிக்க விலங்கு. இவைகள் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளும். இதுபோன்று பல்வேறு தடுப்புகளையும் எவ்வாறு கடப்பது என்பதையும் எளிதாகவே தெரிந்து கொள்கின்றன, தங்களது வாழ்க்கைக்காக என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடியோவில், ஒரு யானை படிகட்டுகளை மிக லாவகமாக ஏறிச் சென்று, திரும்பி ஒரு பார்வை பார்க்கிறது.

இந்த விடியோவுக்கு 2.4K விருப்பங்கள் (லைக்) பதிவு செய்யப்பட்டுள்ளது. 33.2K முறை பார்க்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.