ஹைதராபாத்: சொந்த ஊருக்குப் போக பேருந்து டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில், தெலங்கானா அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
ஹைதராபாத்தில் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பேருந்தை மர்ம நபர் ஓட்டிச் சென்றுவிட்டதாக புகார் வந்தது.
புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த தெலங்கானா காவல்துறை, தெலங்கானா அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் விகரபாத் மாவட்டத்தின் தந்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்ததைக் கண்டறிந்தனர்.
பேருந்தை இயக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நபர், சொந்த ஊருக்கு வர டிக்கெட் கிடைக்காத அதிருப்தியில் அரசுப் பேருந்தை எடுத்துக் கொண்டு வந்திருக்கலாம் என்றும், அவரது ஊர் வந்ததும், பேருந்தை விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்றிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சந்தேக நபரின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

தவாகவினரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்: தி.வேல்முருகன்

வாக்கு எண்ணிக்கை நாளன்று பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக கோரிக்கை
என்ஜினில் கோளாறு: ஸ்விட்சா்லாந்து புறப்பட இருந்த விமானத்தின் பயணம் ரத்து! பயணிகள் மீட்பு; 4 போ் காயம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


