சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தில்லியில் தொடரும் போராட்டம்; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
தில்லி ஜாஃப்ராபாத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


தில்லி ஜாஃப்ராபாத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய போராட்டம் தொடர்ந்து வருகிறது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதீயில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஜஃப்ராபாத் சாலையில் இருந்து ராஜ்காட் வரை மேற்கொள்ளப்படவிருந்த போராட்டக்காரர்களின் நடை பயணத்திற்கு தில்லி போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...