பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி
பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி
புது தில்லி: பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
புது தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வெள்ளி மாலை துவங்கி நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவத்தில் இதுவரை 20 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது வெட்கக்கேடானது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
தில்லி வன்முறைச் சம்பவங்களை அடுத்து காங்கிரஸ் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தில்லி வன்முறைச் சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிறப்பு செயற்குழு கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துக் கூறியதாவது:
பாஜகவின் கபில் மிஸ்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது அவரது பேச்சைப் போலவே வெட்கக்கேடானது. எந்த வமுறை சம்பவங்களிலும் ஈடுபடாமல், எச்சரிக்கையுடன் இருந்து சமாதானத்தை பேணிக்காக்க வேண்டும் என்று தில்லி மக்களுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஒரு வேளை தில்லியைத் தொடந்து அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் வன்முறை பரவுகிறது என்றால், தங்களால் இயன்ற எல்லா முறையிலும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அங்குள்ள காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...