கொல்கத்தா: கொல்கத்தாவில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுத வந்த மாணவி, நுழைவுச் சீட்டை மறந்து விட, போக்குவரத்துக் காவலர் அவரது வீட்டுக்குச் சென்று எடுத்து வந்து உதவிய சம்பவம் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது.
திங்கட்கிழமையன்று மத்யாமிக் எனப்படும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுந்த வந்த மாணவி சுமன் குர்ரே, தேர்வறைக்கு வந்த போதுதான், நுழைவுச் சீட்டை மறந்து விட்டது தெரிய வந்தது.
மீண்டும் வீட்டுக்குச் சென்று எடுத்து வந்தால், தேர்வுக்கான நேரம் முடிந்துவிடும் என்ற நிலையிலும், நுழைவுச் சீட்டு இல்லாமல் தேர்வெழுத அனுமதிக்க முடியாத நிலையில், மாணவி, பள்ளியின் அருகே பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர் சைதன்யா மாலிக்கிடம் தனது நிலையை விளக்கியுள்ளார்.
உடனடியாக, மாணவியின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய போக்குவரத்துக் காவலர், தேர்வுக் கூடத்தில் இருந்து, மாணவியின் வீட்டுக்குச் வந்து நுழைவுச் சீட்டை எடுத்து வர வேண்டி இருப்பது குறித்து அறிவுறுத்தினார்.
தேர்வு தொடங்குவதற்கு முன்பே மாணவியின் வீட்டுக்கு விரைந்துச் சென்ற மாலிக், அவரது தாயாரிடம் இருந்து நுழைவுச் சீட்டை எடுத்து வந்து சுமனிடம் கொடுத்தார். இதனால், அவர் அன்றைய கணிதத் தேர்வை நல்ல முறையில் எழுதினார்.
போக்குவரத்துக் காவலர் உதவவில்லை என்றால், என்னால் இந்த தேர்வை எழுதியிருக்க முடியாது. நான் என் வாழ்நாள் முழுக்க அவரது உதவியை மறக்கவே மாட்டேன் என்றும் சுமர் குர்ரே கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஊழியர்களுக்கான சலுகைகளைக் குறைக்கும் டெலோய்ட்! ஐவிஎஃப் சிகிச்சைக்கான நிதியையும்

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


