மதுராவில் சாலையோரம் நின்றிருந்த காருக்குள் இறந்து கிடந்த மூன்று பேர்
தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர், மனைவி மற்றும் மகள் ஆகியோர் யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் நின்றிருந்த காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மதுரா: தில்லியைச் சேர்ந்த தொழிலதிபர், மனைவி மற்றும் மகள் ஆகியோர் யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் நின்றிருந்த காருக்குள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொழிலதிபரின் மகன் காருக்குள் படுகாயமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாடச் சென்றிருந்த நிலையில், தொழிலதிபர் தனது குடும்பத்தினரைச் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
பிருந்தாவனுக்கு அருகில் 105 வது மைல்கல்லில் நெடுஞ்சாலையோரம் நின்றிருந்த மதுரா பதிவெண் கொண்ட வாகனத்தை காவல்துறையின் ரோந்து வாகனம் சோதித்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்று போலீஸ் கண்காணிப்பாளர் அசோக் குமார் மீனா தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...