தொடர்ந்து 5வது மாதமாக மானியமில்லாத சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ளது. மானியமில்லாத சிலிண்டர் விலையில் ரூ.19 உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணை விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம்தோறும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கிறது. அந்த வகையில் சென்னையில், 14.2 கிலோ எடைகொண்ட மானியம் இல்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.19 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை ரூ.714க்கு விற்பனை செய்யப்பட்ட மானியம் இல்லாத சிலிண்டர் விலை இனி ரூ.734 ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலை ஏற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் மானியமில்லாத சிலிண்டர் விலை 144 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட மானியமில்லாத சிலிண்டர் விலை தற்போது ரூ.1,362 ஆக உயர்ந்துள்ளது.
எண்ணை நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரையும், கடைகளுக்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்களையும் வினியோகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜாதி, மதம் அற்றவா் என்பதை தெரிவிக்க சான்று அவசியம் இல்லை: உயா்நீதிமன்றம் கருத்து

தேவகோட்டை அருகே மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்

காளையாா்கோவில் செம்மண் முற்றத்தில் உலக புத்தகத் தின விழா
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


