தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மனைவியைக் கொன்ற கணவன் கைது! ஒன்றரை வயது குழந்தையையும் விட்டுவைக்காத கொடூரம்!

மனைவி மற்றும் தனது இரண்டரை வயது மகனை இரட்டைக் கொலை செய்த ஒருவரை ராஜஸ்தான் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜனவரி 2020, 5:16 am

IANS

மனைவி மற்றும் இரண்டரை வயது மகனை இரட்டைக் கொலை செய்த ஒருவரை ராஜஸ்தான் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அன்று (ஜனவரி 10) கைது செய்தனர். 

இந்தியன் ஆயில் கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளரான ரோஹித் திவாரி, மறுமணம் செய்து தனது வாழ்க்கையை புதியதாக தொடங்க விரும்பியுள்ளார். இதன் காரணமாக மனைவி ஸ்வேதா திவாதி மற்றும் மகன் ஸ்ரீயம் ஆகியோரைக் கொன்றதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

ரோஹித்தின் வீட்டருகிலுள்ள ஒதுக்குபுறமான இடத்திலிருந்து குழந்தை ஸ்ரீயமின் உடலைப் போலீஸார் மீட்டுள்ளனர்.

விசாரணைக்குப் பின்னர் குற்றம் சாட்டப்பட்ட ரோஹித் திவாரி குற்றத்தை ஒப்புக் கொண்டதாக போலீஸ் கமிஷனர் ஆனந்த் ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார்.

ரோஹித் கடந்த சில ஆண்டுகளாக மனைவியுடன் பிரச்னையில் இருப்பதாகவும், மறுமணம் செய்ய உத்தேசித்து, தனது மனைவியைக் கொல்ல ஒப்பந்தக் கொலையாளியை நியமித்துள்ளார். ஒப்பந்தக் கொலையாளியும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஸ்ரீவாஸ்தவ் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்வேதாவின் பெற்றோர் தங்கள் மகளை ரோஹித் திவாரி உடல்ரீதியாவும் மனரீதியாகவும் துன்புறுத்தியதாகக் கூறினர்.

இந்தத் தம்பதியர் 2011-இல் திருமணம் செய்து கொண்டனர். 2017-ம் ஆண்டில் ஐவிஎஃப் சிகிச்சை முறையில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு, தில்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு குடி வந்துள்ளனர். இந்தக் கொலைக் குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.