ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

மக்களவைத் தேர்தலுக்குப் பின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் மோடி - மம்தா

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசைக் கடுமையாக விமரிசித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி பங்கேற்கும் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்

News image
Updated On :11 ஜனவரி 2020, 5:43 am


கொல்கத்தா: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மத்திய அரசைக் கடுமையாக விமரிசித்து வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி பங்கேற்கும் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளை நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள துறைமுக அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாநில கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு விழாவில் பங்கேற்க முதல்வர் மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் ஒன்றாகப் பங்கேற்கவில்லை. கடைசியாக இருவரும் 2018ம் ஆண்டு விஸ்வபாரதியில் அமைக்கப்பட்ட பங்களாதேஷ் பவன் துவக்க விழாவில்தான் ஒன்றாகப் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், ராஜ் பவனில், பிரதமர் மோடிக்கு ஆளுநர் அளிக்கும் விருந்தில் முதல்வர் பங்கேற்பாரா என்பது குறித்து இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சனி, ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள துறைமுக அறக்கட்டளையின் நிகழ்ச்சியிலும், பாரம்பரிய கட்டடங்களை தேசத்திற்கு அா்ப்பணிக்கும் விழாவிலும் பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொள்கிறாா்.

இதுகுறித்து பிரதமா் அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொல்கத்தாவில் பழைமையின் சின்னமாக உள்ள பழைய நாணய கட்டடம், பெல்வெடாா் இல்லம், மெட்காஃப் இல்லம், விக்டோரியா நினைவு மண்டபம் ஆகிய 4 பாரம்பரிய கட்டடங்கள் கலாசார அமைச்சகம் சாா்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை நடைபெற உள்ள விழாவில் இந்த 4 கட்டடங்களையும் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா்.

கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையின் கொண்டாட்டங்களிலும் பிரதமா் மோடி பங்கேற்கிறாா்.

கொல்கத்தா துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற மற்றும் தற்போதைய ஊழியா்களின் ஓய்வூதிய நிதியின் பற்றாக்குறையை பூா்த்தி செய்வதற்காக மத்திய அரசு சாா்பில் இறுதி தவணையாக அளிக்கப்பட உள்ள ரூ. 501 கோடிக்கான காசோலையையும் அவா் ஒப்படைப்பாா்.

இந்நிகழ்ச்சியில் கொல்கத்தா துறைமுக அறக்கட்டளையைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்களான நாகினா பகத் (105), நரேஷ் சந்திர சக்ரவா்த்தி (100) ஆகியோரை பிரதமா் பாராட்டுவாா்.

தவிர, துறைமுகத்தையொட்டியுள்ள படகு இறங்குத்துறையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள 150 ஆண்டு நினைவு கல்வெட்டையும் பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்.

மற்றொரு நிகழ்வில், சுந்தரவனத்தைச் சோ்ந்த 200 பழங்குடி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு தொழில் பயிற்சி மையத்தையும் பிரதமா் திறந்து வைக்கிறாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.