லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேற்கு வங்கத்தில் பாஜக அலுவலகம் தீ வைத்து எரிப்பு

மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

News image
Updated On :13 ஜனவரி 2020, 6:20 am

DIN


மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சில மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர். நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜகவின் இந்த குற்றச்சாட்டை திரிணமூல் காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

அசன்சோல் பகுதியில் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருவது பிடிக்காமல் திரிணமூல் காங்கிரஸ் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது என்று பாஜக தலைவர் கோபால் ராய் குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பகுதியில் மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்து வருவது ஆளும் கட்சிக்கு பிடிக்கவில்லை என்றும் தீ விபத்து குறித்து தகவல் தெரிவித்தும் போலீஸார் மிகவும் தாமதமாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

இருப்பினும், பாஜக தலைவர் கூறிய குற்றச்சாட்டை திரிணமூல் கட்சித் தலைவர் ஹரேராம் திவாரி மறுத்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.