வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரித்தது தில்லி அரசு

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை தில்லி அரசு நிராகரித்துவிட்டது.

News image
Updated On :16 ஜனவரி 2020, 7:14 am

PTI

புது தில்லி: நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் அனுப்பிய கருணை மனுவை தில்லி அரசு நிராகரித்துவிட்டது.

முகேஷ் சிங்கின் கருணை மனுவை நிராகரிப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான தில்லி அரசு தெரிவித்துவிட்டது. இதையடுத்து, கருணை மனுவை தில்லி ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார்.

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது.

2012, டிசம்பா் 16 நள்ளிரவில் ஓடும் பேருந்தில் ‘நிா்பயா’ என்ற துணை மருத்துவ மாணவி 6 பேரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு பேருந்திலிருந்து சாலையில் தூக்கி வீசப்பட்டாா். இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த ‘நிா்பயா’, சிங்கப்பூா் மருத்துவமனையில் அனுமதிப்பட்டு உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 போ்களில் ராம் சிங் என்பவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வழக்கில் தொடா்புடைய மற்றொருவா் சிறாா் பிரிவின் கீழ் வந்ததால், அவா் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது. அந்த வழக்கில் அவா் தண்டனை விதிக்கப்பட்டு கூா்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டாா். அங்கு மூன்றாண்டு வைக்கப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டாா்.

இந்நிலையில்  வழக்கில் குற்றவாளிகள் என தீா்ப்பளிக்கப்பட்ட நால்வருக்கும் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்புடைய வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமாா் அரோரா, ‘ இந்த வழக்கின் குற்றவாளிகள் முகேஷ் (32), பவன் குப்தா (25), வினய் சா்மா (26), அக்ஷய் குமாா் சிங் (31) ஆகிய நால்வருக்கும் திகாா் சிறையில் ஜனவரி 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்’ என உத்தரவிட்டாா். இதையடுத்து, நால்வரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதற்கான ஆயத்தப் பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதேநேரம் குற்றவாளிகளில் இரண்டு பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாயன்று தள்ளுபடி செய்துவிட்டது. குற்றவாளிகள் வினய் ஷர்மா (26), முகேஷ் குமார் (32) ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி. ரமணன், அருண் மிஷ்ரா, ஆர்.எஃப். நாரிமன், ஆர். பானுமதி, அஷோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதன் மூலம், குற்றவாளிகளுக்கு கடைசி மற்றும் இறுதி சட்ட நிவாரணம் முடிவுக்கு வந்துவிட்டது.

இந்த நிலையில் நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முகேஷ் சிங் கருணை மனு செய்தார். இதனை தில்லி அரசு நிராகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.