புது தில்லி: நிர்பயாவின் மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று அவரது தாய் ஆஷா தேவி கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
நிர்பயா குற்றவாளிகளை ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு நிலுவையில் இருப்பதால், குறித்த தேதியில் நால்வரையும் தூக்கிலிடுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.
நிர்பயா மரணம் அடைந்தது முதல் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மூலம் தொடர்ந்து தனது மகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகப் போராடி வரும் அவரது தாய் இன்று ஊடகங்களுக்கு கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், இதுவரை நான் எப்போதுமே அரசியல் பற்றி பேசியதில்லை. ஆனால், தற்போது அது பற்றி பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. எனது மகள் மரணம் அடைந்த போது 2012ம் ஆண்டில் யாரெல்லாம் சாலையில் இறங்கிப் போராடினார்களோ, அவர்களே தற்போது எனது மகளின் இறப்பின் மூலம் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிர்பயாவின் மரணத்தை வைத்து அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் அதிக வெப்பமான 100 நகரங்களில் 98 இந்தியாவில்! நாடு முழுக்க வெப்ப அலை!!

"தவாகவினர் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் டிஜிபி அலுவலகம் முற்றுகை"

ஆர்.பி.எல். வங்கியின் லாபம் மும்மடங்காக உயர்வு!

5 விக்கெட்டுகள் வீழ்த்தி மோஷின் கான் அபாரம்; லக்னௌவுக்கு 156 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


