தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி: உச்ச நீதிமன்றம்

மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி என்று கூறியுள்ளது.

News image
Updated On :17 ஜனவரி 2020, 10:10 am

IANS


புது தில்லி: மகாத்மா காந்திக்கு பாரத் ரத்னா விருது வழங்கக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விருதுகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் மகாத்மா காந்தி என்று கூறியுள்ளது.

மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, மகாத்மா காந்தி, நாட்டின் தந்தை. அவரை மக்கள் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள். அது விருது மற்றும் எந்தவிதமான அங்கீகாரத்துக்கும் அப்பாற்பட்டது.

அதே சமயம், மனுதாரரின் உணர்வுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். இது குறித்து அரசிடம் முறையிடுங்கள் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.