
இன்று காலை (வியாழக்கிழமை) தில்லியில் நாராயணா பகுதியில், ஸ்கூல் பஸ் ஒன்று கிளஸ்டர் பஸ் மீது மோதிக் கவிழ்ந்ததில் 7 குழந்தைகள் மற்றும் 55 வயது ஆசிரியர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்து நடந்தபோது பஸ் பழைய ராஜீந்தர் நகரில் உள்ள சல்வான் பப்ளிக் ஸ்கூலுக்குச் சென்று கொண்டிருந்தது.
"காலை 7.10 மணியளவில் தீயணைப்பு நிலையம் அருகே நாராயணா பகுதியில் ஒரு ஸ்கூல் பஸ் மோதியது என்று தீயணைப்பு நிலையத்துக்கு அழைப்பு வந்தது" என்று தில்லி தீயணைப்பு சேவைத் (டிஎஃப்எஸ்) தலைவர் அதுல் கார்க் தெரிவித்தார்.
காயமடைந்த மாணவர்கள், 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள், நரைனாவில் உள்ள இரண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நரைனா காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியரும் மூன்று மாணவர்களும் மேத்தா நர்சிங் ஹோமில் இருக்கும்போது, மீதமுள்ள நான்கு மாணவர்கள் கபூர் நர்சிங் ஹோமில் உள்ளனர். அனைவருக்கும் கால், கை மற்றும் முகத்தில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.
"பள்ளி பஸ் மோதியதும் கவிழ்ந்துவிட்டது, இதனால் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காயமடைந்தனர்" என்று சம்பவத்தின் விசாரணை அதிகாரியாக இருக்கும் உதவி துணை ஆய்வாளர் (ஏஎஸ்ஐ) சுஷில் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.