தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பெங்களூருவில் மர்மபொருள் வெடித்து விபத்து: காங்கிரஸ் எம்.எல்.ஏ படுகாயம்

பெங்களூருவில் விழா மேடையில் மர்மபொருள் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். 

News image
Updated On :23 ஜனவரி 2020, 6:02 am

DIN

பெங்களூருவில் விழா மேடையில் மர்மபொருள் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். 

பெங்களூரு சாந்தி நகர் தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சாந்தி நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹாரிஸ் இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். இந்நிலையில், விழா மேடையில் அமர்ந்திருந்த ஹாரிஸின் அருகே மர்ம பொருள் ஒன்று விழுந்து வெடித்தது. இந்த விபத்தில் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேர் காயமடைந்தனர். எம்.எல்.ஏவுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் பெங்களுருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெங்களூரு மத்திய மண்டல துணை போலீஸ் கமி‌ஷனர் சேத்தன்சிங் ரத்தோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். வெடித்தது பட்டாசு என்றும் கூறப்படுகிறது. அது பட்டாசு தானா அல்லது வெடி பொருளா என்பது குறித்து விவேக் நகர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், தன் தந்தை மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்த சிலர் முயற்சித்துள்ளதாக எம்.எல்.ஏவின் மகன் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.