தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் குறித்து ஆலோசனை: சத்தீஸ்கர் முதல்வர்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல் தெரிவித்துள்ளார்.

News image

புபேஷ் பாஹெல்

Updated On :24 ஜனவரி 2020, 11:49 am

IANS

புது தில்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சத்தீஸ்கர் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்தது. இதற்காக மாநில காங்கிரஸ் குழுவை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்க உள்ளதாக சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் முதல்வர் புபேஷ் பாஹெல்,  அவரது அமைச்சரவை சகாக்களுடன் தில்லியில் சோனியா மற்றும் ராகுல் காந்தியை வெள்ளியன்று சந்தித்துப் பேசினார். சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, வேலைவாய்ப்பின்மை அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஒரு திசை திருப்பும் கருவியாகவே பாஜக பயன்படுத்துகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து அமைச்சரவையில் ஆலோசிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.