மேற்கு தில்லியில் மிகப் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட கேஜரிவால்
மேற்கு தில்லியின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.


புது தில்லி: மேற்கு தில்லியின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று மிகப் பிரம்மாண்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மேற்கு தில்லியின் மூன்று சட்டமன்றத் தொகுதிகளான ஜனக்புரி, திலக் நகர் மற்றும் மடிபூரில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களுடன் ஜீப்பில் வலம் வந்த கேஜரிவால், ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். இவரைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்சியின் பாடலை "லாகே ரஹோ கேஜரிவால்" என்று பாடி நடனமாடினர்.
நாங்லோய் மற்றும் ரோஹினி ஆகிய பிற பகுதிகளில் முதல்வர் கேஜரிவால் இன்று பொதுக் கூட்டங்களை நடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...