கர்நாடகத்தில் நடனப் பயிற்சியின் போது 14 வயது சிறுமி மாரடைப்பால் மரணம்
கர்நாடகத்தில், கே.ஜி.எஃப். கிராமத்தில் உள்ள பள்ளியில் நடனப் பயிற்சியின் போது 14 வயது மாணவி


பெங்களூரு: கர்நாடகத்தில், கே.ஜி.எப் கிராமத்தில் உள்ள பள்ளியில் நடனப் பயிற்சியின் போது 14 வயது மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றது.
கொல்லாஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துவந்த மாணவி புஜிதா. இவர் சக மாணவிகளுடன் நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்தார்.
மாணவியை உடனடியாக பள்ளி ஆசிரியர்கள் பங்கர்பேட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், மாணவி ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கேஜிஎஃப் நகரத் காவல் கண்காணிப்பாளர் மொஹம்மத் சுஜீதா ஊடகத்துக்குத் தகவலளித்தார்.
மேலும், இதுகுறித்து தலைமை காவலர் மொஹமத் சுஜீதா கூறுகையில்,
மாணவி உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. சம்பவம் குறித்து விமலா ஹ்ருதயா உயர்நிலைப்பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த அறிக்கையை வெளியிடவில்லை. மேலும் மாணவியின் பெற்றோரும் இதுகுறித்து எந்த புகாரும் அளிக்காதது மிகவும் வருத்தமளிக்கின்றது என்று அவர் தெரிவித்துள்ளார்.
புஜிதா மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததால், அவரது இதயத்தை துடிக்க வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் தோல்வி அடைந்தன. மேலும், மாணவி மருத்துவமனைக்குக் கொண்டுவரும் போதே உயிரிழந்து விட்டதால், முதலுதவி சிகிச்சைகள் எதுவும் அவருக்கு பயனளிக்கவில்லை என்று கே.எல். ஜலப்பா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
புஜிதா உயிரிழந்ததையடுத்து, கலாசார நிகழ்ச்சிகளை பள்ளி நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...