மத்திய அரசின் இந்த நடவடிக்கையின்போது, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தின.
இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் புகைப்படம் ஒன்றை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் ஒமர் அப்துல்லா நீண்ட தாடியுடன், பனிமூடிய சூழ்நிலையில் கம்பளித் தொப்பி அணிந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.