ஆக்ராவைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவி ஒருவர் தாஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் புதன்கிழமை நடந்தது.
எஸ். என். மருத்துவக் கல்லூரியின் மகளிர் மருத்துவத் துறைக்கு இரண்டு நண்பர்கள் அவரை அழைத்து வந்தபோது, 20 வயதான அந்தப் பெண் மயக்கமடைந்து ரத்தப்போக்குடன் இருந்தார்.
இது குறித்து மகளிர் மருத்துவத் துறையின் இணை பேராசிரியர் ரேகா ராணி கூறியது: அவளை மயக்கமடையச் செய்ய பயன்படுத்தப்பட்ட மருந்து என்ன என்பதைக் கண்டறிய ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது’’என்றார்.
மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) பாப்லூ குமார் கூறியதாவது: "உயிர் பிழைத்தவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார், ஆனால் அவர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா என்று தெரியவில்லை. காவல்துறையினருடன் பேசும் உடல்நிலையில் தற்போது அவர் இல்லை. எனவே, நாங்கள் அவரைச் சார்ந்தவர்களைத் தற்போது விசாரித்து வருகிறோம். ஆனால் என்ன நடந்தது என்பது குறித்து அவர்தான் கூறவேண்டும்’ என்றார்.
''சமூக ஊடகங்களில் சந்தித்த ஒரு நண்பரால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது’' என்று எஸ்.எஸ்.பி.
"அந்த நபரின் பெயரையும் பிற விவரங்களையும் அந்தப் பெண் பகிர்ந்து கொண்டவுடன், நாங்கள் மேலும் நடவடிக்கை எடுப்போம்," என்று கூறினார்.
சுயநினைவு வந்தவுடன் பாதிக்கப்பட்டவரின் அறிக்கையைப் பதிவு செய்ய, ஒரு பெண் போலீஸ் அதிகாரி உள்ளிட்ட சில பெண் போலீஸார் மருத்துவமனையில் காத்திருக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்குவரத்து போலீஸாருக்கு பிரீத் அனலைசா் கருவிகள்

கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் சிறப்பு அலங்காரம்...

தில்லி ஜண்டேவாலன் கோயிலில் நவராத்திரியின் முதல் நாளில் வழிபாடு மற்றும் தரிசனம் செய்த பக்தா்கள்

வாளையாறு அணையில் குளித்தபோது மூழ்கிய குமரி மாவட்ட மாணவரின் சடலம் மீட்பு
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

