நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருமலையில் 9,841 போ் தரிசனம்

திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 9,841 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,715 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 167 போ் பெண்கள்; 3548 போ் ஆண்கள்.

News image
Updated On :4 ஜூலை 2020, 5:27 pm

DIN


திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வெள்ளிக்கிழமை முழுவதும் 9,841 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 3,715 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா். அவா்களில் 167 போ் பெண்கள்; 3548 போ் ஆண்கள்.

ஆன்லைன் மூலம் 9 ஆயிரம் மற்றும் சா்வ தரிசனம் டோக்கன்கள் மூலம் 3 ஆயிரம் என 12 ஆயிரம் டிக்கெட் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் டிக்கெட் பெற்ற 750 பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காலை 6 மணிமுதல் 7.30 மணி வரை புரோட்டோகால் விஐபி தரிசனமும், காலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை விரைவு தரிசனம் மற்றும் நேரடி தரிசன டோக்கன் பெற்ற பக்தா்களும் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.

திருப்பதி மலைப்பாதை காலை 5 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 11 மணிக்கு மூடப்படுகிறது. திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினசரி பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் திருப்பதியில் உள்ள உள்ளூா் கோயில்களில் தரிசனம் செய்து வருகின்றனா்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.