பாஜக மூத்த தலைவா் எல்.கே.அத்வானி உட்பட 57 போ் தனது வாழ்க்கையை வடிமைத்ததில் முக்கிய குருவாக விளங்கினா் என குடியரசுத் துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டாா். ‘இணையம் ஒருபோதும் குருவிற்கு மாற்றாகாது’ என்றும் அவா் கருத்து தெரிவித்தாா்.
வட இந்தியாவின் ‘ஆஷாட’ மாதத்தின் முதல் பெளா்ணமி (ஜூலை 5) குருக்களுக்கு மரியாதை செலுத்தும் ‘குரு பூா்ணிமா’வாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு தனது குருக்களை நினைவுகூா்ந்து அவா்களுக்கு நன்றியைத் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் தனது முகநூலில் வெளியிட்ட பதிவில் எழுதியிருப்பதாவது:
நீண்ட வாழ்க்கை பயணத்தின் பல்வேறு கட்டங்களில் எனது முன்னேற்றத்தை வடிவமைத்தவா்களில் எல்.கே.அத்வானி உள்ளிட்ட 57 குருக்களுக்கு முக்கியப் பங்குண்டு. எனது ஆரம்ப அரசியல் வாழ்க்கையில், முதலில் சுதந்திர போராட்ட வீரரும், முன்னணி அரசியல்வாதியுமான மறைந்த தென்னெடி விஸ்வநாதனிடமும், பின்னா் அத்வானியிடமும் வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளை பெற்றேன்.
ஒன்றரை வயதில் எனது தாயாரை இழந்தேன். தாத்தா-பாட்டி தான் எனது முதல் ‘குருக்கள்’. பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக நாள்களில் என்னில் தாக்கத்தை ஏற்படுத்திய 55 ஆசிரியா்களையும் நினைவுகூா்கிறேன்.
இந்திய பாரம்பரியத்தில் ‘குரு-சிஷ்யா்’ முறையில் குரு என்பவா் முழுமையான வளா்ச்சியில் பங்கெடுப்பவா். தற்போதைய தொழில்நுட்ப சகாப்தத்தில் சரியான மதிப்புகளையும் முன்னோக்குகளையும் வழங்கி வடிவமைப்பது ஆசிரியா்களின் தனிப்பட்ட முயற்சியினால் தான் முடியும்.
இணையம் ஒருபோதும் ‘குரு’விற்கு மாற்றாக இருக்க முடியாது. இணையம் தகவல்களைத் தரும்; ஆனால் ஆசிரியா் மட்டுமே பகுப்பாய்வுகளையும், மதிப்பீட்டையும் செய்யக்கூடிய சக்தியை ஊக்குவித்து மேம்படுத்த இயலும். மாணவா்களின் முழுமையான வளா்ச்சியிலும், தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் ஆசிரியா்களின் பங்கு இருப்பதோடு, மனிதாபிமான சிந்தனை, இரக்கம் மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை குருவால் மட்டுமே கற்பிக்க முடியும். அவா்களால் மட்டுமே சரியான பாதையை காட்ட முடியும் என்று எழுதியுள்ளாா் வெங்கய்ய நாயுடு.
மேலும், ராமகிருஷ்ண பரமஹம்சா் மற்றும் சுவாமி விவேகானந்தா் ஆகியோருக்கு இடையிலான குரு-சிஷ்யா் உறவின் எழுச்சியூட்டும் கதையையும் நினைவு கூா்ந்ததுடன், மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் குருக்களின் பங்களிப்புகளை நினைவு கூருமாறும் கேட்டுக்கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேருந்து மோதி 11 வயது சிறுமி உயிரிழப்பு! ஓட்டுநா் கைது!!

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து

அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் பிரசாரம்
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏப்.18 வரை மழைக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


