மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?
/

கரோனா மருந்தின் விலையை குறைத்தது கிளென்மார்க் பார்மா

கரோனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் என்ற மாத்திரையின் விலையை 27% குறைத்து ஒரு மாத்திரையின் விலை ரூ.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

News image

கரோனா மருந்தின் விலையை குறைத்தது கிளென்மார்க் பார்மா

Updated On :13 ஜூலை 2020, 8:03 am

PTI


கரோனா சிகிச்சைக்கு மும்பையை சேர்ந்த மருந்து நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஃபேவிபிரவிர் என்ற மாத்திரையின் விலையை 27% குறைத்து ஒரு மாத்திரையின் விலை ரூ.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த கிளென்மார்க் பார்மாக்யூடிகல் மருந்து நிறுவனத்தின் ஃபேவிபிரவிர் (FAVIPIRAVIR) மருந்துக்கு மத்திய அரசு ஜூன் மாதம் அனுமதி வழங்கியது. FabiFlu என்ற பிராண்ட் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் மருந்தை கரோனா பாதித்து லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த மாத்திரை விற்பனைக்கு வந்த போது மருந்தின் விலை ஒரு மாத்திரை ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

அப்போது மருந்துச் சந்தையில், இந்த மருந்து 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையாக ரூ.3,500க்கு விற்பனைக்கு வந்தது. தற்போது, இந்த மாத்திரையின் விலை 27% குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மாத்திரையின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.75 ஆகக் குறைந்துள்ளது.

இந்தியாவில், ஃபேபிஃப்ளூ (FabiFlu) மருந்துதான், முதல் முறையாக கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க வாய் வழியாக அளிக்க பரிந்துரை செய்யப்பட்ட முதல் மருந்து,

இது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டால் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து என்ற நிலையில் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.