நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை மனுத் தாக்கல் செய்துள்ளது.

News image
தங்கக் கடத்தல்: ஸ்வப்னா சுரேஷை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ மனு
Updated On :13 ஜூலை 2020, 5:14 am

DIN


திருவனந்தபுரம் : தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப்பை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை மனுத் தாக்கல் செய்துள்ளது.

ஸ்வப்னா சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக பெங்களூரில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயா் ஆகிய இருவரையும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று கேரளத்துக்கு அழைத்து வந்தனா்.

அவா்கள் இருவரும் கரோனா பரிசோதனைக்குப் பின்னா், கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவர்களுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கக் கடத்தல் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் ஒரு துணை நிறுவனத்தில் மக்கள் தொடா்பு அதிகாரியாகப் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 போ் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்தது. தலைமறைவான அவரை என்ஐஏ தேடி வந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டுவந்த சந்தீப் நாயருடன் பெங்களூரில் பதுங்கியிருந்த ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனா். பின்னா் இருவரையும் கேரளம் அழைத்து வந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பெங்களூரில் கைதுசெய்யப்பட்ட அவா்கள் இருவரும் கேரளத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துவரப்பட்டனா். கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்துவதற்கு முன்பாக, கட்டாய கரோனா பரிசோதனைக்காக எா்ணாகுளத்தில் உள்ள ஆலுவா மருத்துவமனைக்கு இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனா்‘ என்று கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.