அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அறிவுக்கும் திறனுக்கும் என்ன வித்தியாசம்: பிரதமர் மோடி விளக்கம்

அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் சிலர் குழப்பிக் கொள்வார்கள் என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார்.

News image
அறிவுக்கும் திறனுக்கும் என்ன வித்தியாசம்: பிரதமர் மோடி விளக்கம்
Updated On :15 ஜூலை 2020, 6:08 am

ANI


அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் சிலர் குழப்பிக் கொள்வார்கள் என்று கூறியிருக்கும் பிரதமர் மோடி, அறிவுக்கும் திறனுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கியுள்ளார்.

சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, சர்வதேச இளைஞர் திறன் தினத்தில், அனைத்து இளைஞர்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற கரோனா பேரிடர் காலத்தில் நமது வேலை வாய்ப்புகளும், அதனை செய்யும் முறையும் மாற்றம் கண்டுள்ளது. இதனால், புதிய தொழில்நுட்பங்களிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற சமயங்களில் இளைஞர்கள் புதிய திறனை வளர்த்துக் கொள்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

திறன் என்பது நமக்கு நாமே அளிக்கும் ஒரு பரிசு. அது அனுபவத்தின் மூலம்தான் வளர்கிறது. திறனுக்கு எந்த காலமும் கிடையாது, காலம் செல்ல செல்ல திறன் வளர்ந்து கொண்டே இருக்கும். திறன் என்பது தனித்துவம் மிக்கது, அது பிறரிடம் இருந்து உங்களை தனித்துக் காட்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கேற்ற பயிற்சி அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பணம் சம்பாதிக்க மட்டுமே திறனைப் பயன்படுத்தக் கூடாது வேலை வாய்ப்புக்கேற்ற திறனை இளைஞர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மேலும், சிலர் எப்போதுமே அறிவையும் திறனையும்  குழப்பிக் கொள்வார்கள். அவர்களுக்கு நான் அது குறித்து விளக்குகிறேன், அதாவது, சைக்கிள் ஓட்டுவது எப்படி என்று புத்தகம் மூலம் படிப்பதும், இணையதளத்தில் பார்ப்பதும் அறிவை வளர்க்கும். ஆனால், ஆனால் இதை எல்லாம் செய்வதால் நீங்கள் சைக்கிளை ஓட்ட முடியும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது, உண்மையிலேயே நீங்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால், அதற்கு உங்களுக்கு திறன் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.