மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 191.2 மி.மீ. மழைப் பதிவு
மும்பையில் மிதமான மழை முதல் கனமழை வரை வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையின் காரணமாக ஜூலை மாதத்தில் கடந்த 16 நாள்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,024 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.


மும்பையில் மிதமான மழை முதல் கனமழை வரை வியாழக்கிழமை காலை வரை பெய்த மழையின் காரணமாக ஜூலை மாதத்தில் கடந்த 16 நாள்களில் மட்டும் ஒட்டுமொத்தமாக 1,024 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
அதே சமயம், மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த ஒட்டுமொத்த மழையானது 2015-ஆம் ஆண்டில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழைக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் பதிவாகியுள்ளது.
சான்டாக்ரூஸ் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடையும் 24 மணி நேரத்தில் மட்டும் 191.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி 24 மணி நேரத்தில் அதிக மழை அதாவது 375.2 மி.மீ. மழை பதிவானது. இதுதான் மும்பையில் ஜூலை மாதத்தில் பதிவான அதிகபட்ச மழையாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...