ஸ்ரீநகர்: அமர்நாத் யாத்ரீகர்களை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெள்ளியன்று ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது.
மத்திய அரசின் அனுமதிக்குப் பிறகு வரும் 21-ஆம் தேதியன்று அமர்நாத் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் துவங்க உள்ளது.
இந்நிலையில் அமர்நாத் யாத்ரீகர்களை பயங்கரவாதிகள் குறி வைத்திருப்பதாக வெள்ளியன்று ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளியன்று ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய 9 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு கமாண்டர், பிரிகேடியர் வி.எஸ்.தாக்கூர் கூறுகையில், ‘அமர்நாத் யாத்ரீகர்களை தேசிய நெடுஞ்சாலை 44–இன் வழியாக தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக எங்களுக்கு உளவுத் துறை தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அதனை முறியடிக்க எங்களிடம் திறனும் படைபலமும் உள்ளது. வெள்ளியன்று காஷ்மீரின் தெற்கு குல்காம் மாவட்டத்தில் வெள்ளியன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த வலீத் என்ற பயங்கரவாதி உட்பட மூவர் கொல்லப்பட்டனர். இது பயங்கரவாதிகளுக்கு சரியான பதிலடியாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

இளைஞரின் தலையில் சிக்கிய 10 கிலோ பால் கேன்! 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு அகற்றம்

பிளேயிங் லெவன் மாற்றத்தினால் தடுமாறும் சிஎஸ்கே..! மிகக் குறைந்த பவர்பிளே ரன்கள்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


