நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் மனுத் தாக்கல்

​கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

News image
​கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். (கோப்புப்படம்)
Updated On :21 ஜூலை 2020, 1:34 pm

DIN


கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ் கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்குப் பதிவு செய்து, கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரது 8 நாள் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது என்ஐஏ காவலை ஜூலை 24-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார். ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவையும் ஜூலை 24-ஆம் தேதியே நீதிமன்றம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.