ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

'சாமானிய மக்கள் எப்படி பாதுகாப்பாக உணர முடியும்?' - உ.பி.யில் பத்திரிகையாளர் தாக்குதல் குறித்து பிரியங்கா கேள்வி

காசியாபாத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி
Updated On :22 ஜூலை 2020, 7:48 am

DIN

காசியாபாத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே பத்திரிகையாளர் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கியத்துடன் துப்பாக்கியால் சுட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காசியாபாத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி என்பவர் தனது இரு மகள்களுடன் விஜய் நகர் அருகே வந்துகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவரைத் தாக்கினர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

இதுதொடர்பாக காவல்துறையினர் இன்று ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மொத்தமாக  இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காசியாபாத் மூத்த போலீஸ் சூப்பிரண்டு கலாநிதி நைதானி தெரிவித்துள்ளார். துப்பாக்கியால் சுடப்பட்ட பத்திரிகையாளர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். 

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

'காசியாபாத்தில் பத்திரிகையாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தை வைத்து ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் நிலைமையை தெரிந்துகொள்ள முடியும். தனது மருமகளை கிண்டல் செய்த நபர்கள் மீது பத்திரிகையாளர் போலீசில் புகார் கொடுத்ததால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் எப்படி தங்களை பாதுகாப்பாக உணர முடியும்?' என்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.