ஊழியருக்கு கரோனா: தனிமைப்படுத்திக் கொண்ட ஹிமாச்சல் முதல்வர்!

ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

Updated on
1 min read

சிம்லா: ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய் ராம் தாக்குர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘முதல்வர் அலுவலகத்தில் துணைச் செயலாளர் அந்தஸ்த்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முதல்வர் ஜெய் ராம் தாக்குர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

முதல்வர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு வெகுவிரைவில் தொற்றுப் பரிசோதனை நடைபெற உள்ளது. எனவே முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்சிகள் அனைத்தும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன’ என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com